சேலம் மாவட்டம் அக்கரைப்பட்டி கிராமத்தில் முத்து நல்லி கவுண்டர் - பாப்பாயம்மாள் தம்பதிக்கு 10-01-1921 ம் ஆண்டு மகனாக பிறந்தார். திருச்செங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை சென்று லயோலா கல்லூரியில் பி.காம், பி.ஏ. பட்டப் படிப்பில் சேர்ந்தார்.
எம்.ஏ முதலாண்டு படிக்கும் போது நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். அதன் காரணமாக தனது படிப்பைத் தொடர கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ பட்டம் பெற்றார். சிற்றன்னை ஜமீன்தாரிணி நல்லாயம்மாள், சித்தப்பா பரமசிவம் அவர்களால் சங்கரிப்பட்டி ஜமீன்தாராக நியமிக்கபட்டார்.
திரு. காளியண்ண கவுண்டர் அவர்கள் தனது 27-வது வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கபட்டார். 1947-ல் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர் இவர் ஒருவரே!
1952-ல் இராசிபுரம் சட்டப் பேரவை உறுப்பினராகவும், 1957 மற்றும் 1962-ல் திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1967-ல் தமிழக மேலவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். மேலவையின் எதிர்க்கட்சித் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
அன்றைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் தலைவராக (ஜில்லாபோட்டு தலைவர்) இருந்தார். அவருக்குப் பிறகு ஜில்லா போர்டு கலைக்கப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக எட்டு ஆண்டுகள் இருந்தார். இந்தியன் வங்கியின் இயக்குனராகவும், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.
சேலம் மாவட்ட நூலகக் குழுத்தலைவராக பதவி வகித்தார். கல்விக் கூடங்கள் கட்டவும், ஆன்மீகப் பணிகளுக்காகவும் தனது சொந்த நிலத்தை தாராளமாக தானமாக வழங்கியவர். கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்.
கொங்கு புலவர் முனைவர் திரு. செ. இராசு அவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களால் உ.வே.சா (உ.வே. சாமிநாதையர்) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
முனைவர் திரு. செ. இராசு அவர்கள் 1938-ல் பிறந்தார். 1959-ல் அவரது தமிழாசிரியர் பணியை துவங்கினார். இவர் 15 படங்களும், 14 விருதுகளும் பெற்றவர். உலகத் தமிழ் மாநாடுகளிலும், இசுலாமிய இலக்கிய மாநாடுகளிலும் பங்கேற்றுளார்.
உலகத் தமிழ் மாநாடு 2010-ல் பங்கேற்று, தினமலர், தினதந்தி, தினகரன் போன்ற இதழ்களில் மாநாட்டை யொட்டி 10 கட்டுரைகள் எழுதியுள்ளார்.
பல்வேறு நூல்களும், கட்டுரைகளும் பல்வேறு இதழ்களுக்காக எழுதியுள்ளார். பல ஆங்கிலம் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
கொங்கு நாட்டில் முதன்முதலாக கோவை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையை ஒரு பொது நிறுவனமாக நிறுவி வெற்றிகரமாக நடத்திவருபவர். என்ஜீபி என்ற கல்வி நிறுவனங்களையும் நடத்திவருபவர்.
ஈரோட்டின் ஒரு சாதாரண கிராமத்திலிருந்து பிறந்து வளர்ந்து, சென்னையில் படித்து டாக்டர் பட்டம் பெற்று பின்னர் அமெரிக்காவில் உயர் படிப்பு முடித்து அங்கேயே வெற்றிகரமான மருத்துவராக பெயர் பெற்றவர்.
அமெரிக்க வாழ் மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்களின் உதவியுடன் கோவை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை சுமார் இருநூறு படுக்கைகளுடன் ஆரம்பித்து இன்றையளவில் எழுநூறுக்கும் அதிகமான படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது.
கோவை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் முதல் உதவி சிகிச்சை மையம், அவசர சிகிச்சை மையம் போன்றவற்றை நிறுவி மக்களின் தேவையை அறிந்து செயல்படுகிற நிறுவனமாக கோவை மருத்துவமனை செயல்பட்டுவருவது ஒவ்வொருவருக்கும் எடுத்துகாட்டாகும்.
இவரின் சமுதாய நோக்கமும் எளியோர்க்கு உதுவுகிற எண்ணமும் கொண்டு மருத்துவமனையை நடத்திவருவது கொங்கு நாட்டிற்கு கிடைத்த ஒருவரபிரசாதமாகும்.
ரூபாய் ஒரு கோடிக்குமேல் நன்கொடை அளித்து கிராமங்களின் சுகாதார மேம்பட்டிற்க்ககாவும், பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கும் வழங்கியுள்ளார்.
திரு.ஏ.சக்திவேல், பின்னலாடை, தறி ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, விடுதி மற்றும் நூற்பாலை போன்ற தொழில் துறைகளில் தனி முத்திரை பதித்தவர். மைய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.
கொங்கு நாட்டின் மிகசிறந்த தொழிலதிபராக உழைப்பால் உயர்ந்து முன்னேறியவர்.
இவருடைய தொலைநோக்கு பார்வையில் செயல்முறைபடுத்தப்பட்ட திட்டங்களினால் திருப்பூர் பின்னாலாடை தொழில் இன்றைய உயர்ந்த நிலையில் முன்னேறிகொண்டுள்ளது.
கொங்கு மண்டலத்தின் ஒப்பற்ற தொழிலதிபராக இன்றைக்கு திகழ்கிறார்.
தன் குடும்பம், தன்னுடைய தொழில், என்றுமட்டும்பாராமல் பின்னலாடை மற்றும் நூற்பாலை தொழில்கள் வளம்பெறவேண்டுமென்று இவர் கருதி எடுத்த முயற்சிகளினால் உருவானதுதான் திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை தொழில் நகரம், திருப்பூர் நகர மேம்பாட்டு வாரியம், பின்னலாடை தொழில்நுட்ப நிறுவனம் போன்றவை.
சமுதாய நலங்கருதி தொழிலாளர் நல திட்டங்கள் பலவற்றை தானே முன்மாதிரியாக தனது நிறுவனங்களில் செயல்படுத்திவருபவர்.
இவருடைய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் மைய அரசுக்கும் மாநில அரசுக்கும் தவறாமல் அளித்துவருபவர்.
முதியோர் மருத்துவர் டாக்டர் திரு.வி.எஸ்.நடராசன் அவர்களுக்கு இந்திய அரசு வழங்கும் பத்மஸ்ரீ விருது வழங்கபட்டுள்ளது.
இந்தியாவில் முதியோர் மருத்துவ துறையை முதன்முதலாக சென்னை மருத்துவமனையில் நிறுவியவர் திரு. நடராசன் அவர்கள். அந்த துறையில் பேராசியராகவும் 1857 முதல் 1997 வரை பதவிவகித்தவர்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், 15க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் மற்றும் வானொலியிலும் முதியோர் மருத்துவத்தைபற்றி அதிகமாக செய்திகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார்.
இந்தியாவில் மட்டுமில்லாது அயல்நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்கங்களில் முதியோர் மருத்துவம்பற்றி சொற்பொழிவாற்றியுள்ளார்.
இங்கிலாந்த்தின் முதியோர் மருத்துவ மையம் இவரின்சேவையை பாராட்டி தனது 50வது ஆண்டுவிழாவைமுன்னிட்டு அன்னாருக்கு விருதுவழங்கி கெளரவித்தது.
புகழ்பெற்ற டாக்டர் பி.சி.ராய் தேசிய விருதை இந்திய அரசின் ஜனாதிபதி அவர்களிடமிருந்து பெற்ற பெருமைக்குரியவர்.
லூதியானவிலுள்ள நேரு சித்தாந்த கேந்திரியம் வழங்கும் சட் பால் மித்தல் தேசிய விருதை தனது சேவைக்காக பெற்றவர்.
தமிழகத்தின் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகம் அன்னாரின் சேவையை பாராட்டி அவரை மாண்புமிக்க பேராசிரியராக நியமித்து கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.
மெமரி மருதுவ மையம் ஒன்றை சென்னையில் நிறுவி முதியோருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இந்திய அரசின் சமூக நீதி துறையின் சார்பில் தேசிய முதியோர் நல வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கபட்டு சேவையாற்றிவருகிறார்.
தமிழக அரசின் சிறந்த சமூக ஆர்வலர் விருது பெற்றவர்.
கொங்கு சொந்தம் டாக்டர் திரு. வி.எஸ்.நடராசன் அவர்களுக்கு பத்மஸ்ரீ பெற்றமைக்கும், அன்னார் அவர்கள் மேன்மேலும் பல விருதுகளைபெற்று கொங்கு சமுதாயத்திற்கு பெருமைசேர்க்கவும் கூட்டமைப்பும் அதன் உறுப்பினர் சங்கங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது.
சென்னை எம்ஜிஎம் மற்றும் என்.எஸ்.ஐ.டி குழுமத்தின் தலைவர் மற்றும் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் தலைவருமான கொங்கு மாமணி திரு. முருகேசன் அவர்களின் தொழில் துறை, சமூக சேவை, கல்வி சேவை மற்றும் பல துறைகளில் ஆற்றிய சாதனைகளை பாராட்டி போற்றி, கொழும்பு திறந்தவெளி பல்கலைகழகம் அவருக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
அகவை 77ல் அடியெடுத்துவைக்கும் அன்னார் அவர்களின் சமுதாய பற்றையும், அவர் தொழில் துறையில் அதுவும் குறிப்பாக வாகன போக்குவரத்து துறையில் ஆற்றிய சாதனைகளை அனைவரும் அறிவர். தமிழகத்தின் வாகன போக்குவரத்துவரத்தில் பல ஆண்டுகாலமாக தனிமுத்திரையுடன் முதலிடத்தில் அவரின் நிறுவனங்கள் செயல்பட்டுவருவது அன்னாரின் திறமைக்கு எடுத்துகாட்டாகும்.
அன்னாரின் முயற்சியால்தான் கூட்டமைப்பின் காலிங்கராயன் மாணவர் கல்வி உதவி திட்டத்திற்கு கொங்கு பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து கூட்டமைப்பு பரிந்துரைக்கும் தகுதியான ஆனால் பொருளாதாரத்தில் தாழ்ந்திருக்கும் கொங்கு சமுதாய மாணவர்கள் இருவருக்கு வருடாவருடம் இலவச இடங்களைபெறுகிறார்கள் என்பதை தெரிவித்தி நினைவில்கொள்கிறோம்.
முனைவர் பட்டம் பெற்றமைக்கும் இனிமேலும் பல சிறப்பு விருதுகள் பெறுவதற்கும் கூட்டமைப்பு திரு.முருகேசன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாரட்டுதழ்களையும் தெரிவித்துகொள்கிறது.
தீரன் சின்னமலை கவுண்டர் - சுதந்திர போராட்ட வீரர்.
வெள்ளைகினர் சின்னப்பா வெள்ளிங்கிரி கவுண்டர் - விவசாயி மற்றும் நாட்டு முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்.
அப்பாச்சி கவுண்டர் - மருது சகோதரர்கள், கட்டபொம்மன் ஆகியவர்களுடன் சேர்ந்து நாட்டு ஒருமைப்பா டிற்காண செயல் திறன்களை வகுத்தவர்.
எண்ணமங்கலம் கே. ராமசாமி கவுண்டர் - பதினைத்து வயதில் சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றவர்.
விளையாட்டு
முத்தையா முரளிதரன் - புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர்.
S. மாரிசாமி - சத்தியமங்கலத்தை சேர்ந்த இவர், இந்தியாவிற்காக ஆசியா கைப்பந்து போட்டியில் பங்கேற்றவர்.
T. முத்து பிரபாகரன் - 350 திறன் மோட்டார் பந்தய வீரர், திருப்பூரை சேர்ந்தவர்.
ர. மோகனசெல்லம் - சரவணம்பட்டியை சேர்ந்த இவர், இந்தியாவிற்காக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் பங்கு பெற்றவர்.