கொங்கு வேளாளர் கூட்டப் பிரிவுகள் (அல்லது குலப்பிரிவுகள்) நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளது. ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது.
கொங்கு வேளாளர் குலங்கள் 60, 90 என வளர்ந்து தற்போது 141 ஆகியுள்ளன. அழகுமலைக் குறவஞ்சி 18ம் நுற்றாண்டுக்குரியது. இதில் 141 குலங்கள் பற்றி பட்டியல் அமைந்துள்ளது. மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம்.
கவுண்டர் என்ற சொல் தற்போது சாதி அடையாளம் கொண்டு அறியப்பட்டாலும் அது எந்த சாதியையும் அடையாளப்படுத்தும் சொல் அல்ல. ஊர் பெரிய மனிதரை கவுண்டர் என்று அழைத்தனர். ஊரில் நிறைய பெரிய மனிதர்கள் இருந்தாலும் ஒருவரையே கவுண்டர் என்ற அடைமொழி கொடுத்து அழைத்தனர். அவரை ஊர் கவுண்டர் என்று அழைத்தனர். கொங்கு நாட்டுப் பகுதியில் ஊர் கவுண்டரை கொத்துக்காரர் என்றும் அழைப்பர். ஊரை உருவாக்கிய மரபைச்சேந்தவர்களையே இவ்வாறு சகல முதல் மரியாதைகளையும் கொடுத்து அழைக்கின்றனர். இது பெரும்பாலும் கொங்கு வெள்ளாள (கொங்கு வேளாளர்) கவுண்டர்களுக்கே உள்ளது. சங்க மன்னர்களான கொங்கர் (கங்கர்)களது நிருவாக முறையான கமுண்ட (காமிண்ட) முறை. கவுண்டர் என்ற சொல் காமிண்டன் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. காமிண்டன் என்றால் நிலத்தை, மக்களை, நாட்டை காப்பவன் என்று பொருள்.
கவுண்டர் என்ற அடையாளத்தை பயன்படுத்தும் சாதிகளின் பட்டியல்: